O Panneerselvam ( @OfficeOfOPS ) Twitter Profile

OfficeOfOPS

O Panneerselvam

News and Updates from Thiru O. Panneerselvam Deputy Chief Minister of TamilNadu. Coordinator AIADMK.

Joined on 8 December, 2016

https://www.facebook.com/OfficeOfOPS/

  • 3.1k Tweets
  • 686.1k Followers
  • 55 Following

I am grieved to learn about the sudden demise of Shri.Tarun Gogoi @tarun_gogoi ji, a senior Congress leader and former chief minister of Assam. My condolences to the bereaved family members. May his soul rest in peace at the feet of Almighty.

 184  7  28  Download

மாண்புமிகு அம்மா அவர்கள் வளர்த்த சிங்கங்கள் அஇஅதிமுகவின் தொண்டர்கள்.

சிங்கத்தின் குகையிலே வந்து சிறுநரிகள் வாலாட்ட முடியாது.

அஇஅதிமுக தொடர்ந்து 3-வது முறையும் வெற்றிக்கனியை பறிக்கும்; முத்திரை பதிக்கும்! #AIADMK

 2,524  276  355

தமிழக அரசியல் வரலாற்றில், 29 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும் ஒரே இயக்கம் நமது கழகம். சரித்திர புகழ்பெற்ற நம் கழகத்தின் பொற்கால ஆட்சி தொடர கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒற்றுமையோடும், அர்ப்பணிப்போடும் உழைத்து, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூட சூளுரைப்போம்!

 911  51  177  Download

Wishing President-elect of the USA @JoeBiden more years of happiness on his birthday.A man with a commitment towards the welfare of the people has turned every stone into achievement through his perseverance &faith.I pray to the almighty to bless him with good health & prosperity

 501  15  59  Download

லடாக்கில் நடந்த எதிர்பரா வாகன விபத்தில் கோவில்பட்டி- திட்டங்குளத்தை சேர்ந்த இராணுவ வீரர் திரு.கருப்பசாமி அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். நாட்டைக் காக்கும் பணிக்காக உயிர்நீத்த வீரரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 984  53  134  Download

என்றென்றும் எங்கள் இதயத்தில் அம்மா!!

 3,055  162  272  Download

நவ.11ம் தேதி 24மணிநேரத்தில் 17பிரசவங்கள் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளது விருதுநகர்- ஜமீன்கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம். அர்ப்பணிப்போடு உயிர்காக்கும் உன்னத சேவையாற்றி தாய்சேய் நலன்காத்த தலைமை மருத்துவர் Dr.கருணாகரப்பிரபு, அவரது குழுவினருக்கு எனது உளமார்ந்த பாராட்டுகள்!

 648  31  86  Download

பெருந்தலைவர் காமராசரால் பாராட்டப்பெற்றவரும், தியாகம், நேர்மைக்குரியவருமான மதச்சார்பற்ற ஜனதா தள தமிழகத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.முகமது இஸ்மாயில் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!

 347  29  58  Download

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (17.11.2020) போக்குவரத்துத் துறை செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

 667  33  87  Download

உலகை இயக்கும் உந்துசக்தியான மாணவர்களுக்கு எனது இதயப்பூர்வமான சர்வதேச மாணவர்கள் தின (நவ.17) நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாளைய வரலாற்றை படைக்கவிருக்கும் அன்பிற்குரிய மாணவச்செல்வங்களே, மனதில் உறுதியோடும், தன்னம்பிக்கையோடும் சவால்களை எதிர்கொள்ளுங்கள். உலகம் உங்கள் கையில்!

 539  28  113  Download

பிரான்சு வொரெயால் தமிழ்க் கலாச்சார மன்றம் மற்றும் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை இணைந்து வழங்கும் "முத்தமிழ் விழா-2020" இணையவழி நேரலையில் நேற்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கலந்துரையாடியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

 631  43  131  Download

ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் சமூக அக்கறையோடு உலக நிகழ்வுகளை உடனுக்குடன் உண்மை தன்மையுடன் வழங்கிட இரவுபகல் பாராது உழைக்கும் ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை மற்றும் ஊடகவியல் துறை நண்பர்களுக்கு எனது உளமார்ந்த தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள்! #NationalPressDay

 683  36  125  Download

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட எதிர்பாரா தீ விபத்தில், துரதிர்ஷ்டவசமாக தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் திரு.சிவராஜன், திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

 554  39  94

இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, விபத்தில் காயமடைந்தோர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

 226  22  31

தீப ஒளித் திருநாள் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் துன்பங்களை நீக்கட்டும்; இன்பங்களும், இனிய நிகழ்வுகளும் களை கட்டட்டும்; தமிழக மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! #Diwali #HappyDiwali

 930  69  167  Download

இன்னல்கள் எனும் இருள் நீங்கி நன்மைகள் எனும் ஒளி பரவிடச் செய்யும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை உவகையோடும் உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். #HappyDiwali

 1,013  80  129  Download

இன்று (13.11.2020) மதுரை வருகை புரிந்த போது, மாண்புமிகு அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் @Udhayakumar_RB அவர்கள் வரவேற்பு அளித்து, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்தார். #HappyDiwali

 589  34  68  Download

தீப ஒளித்திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர்கள் திரு.செல்லூர் ராஜூ @SellurKRajuoffl அவர்கள், திரு.பா.பெஞ்சமின் @PBenjaminoffl அவர்கள் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 496  30  55  Download

தீப ஒளித்திருநாளை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் திரு.எல்.முருகன் @Murugan_TNBJP அவர்கள் இன்று நேரில் சந்தித்து, தீபாவளித் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

 894  39  119  Download

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். வாழ்த்துகளும், நன்றியும்! #Diwali

 533  27  77  Download

End of content

No more pages to load